இலங்கையின் முதற்தர நிறுவனங்கள் மற்றும் IIT மாணவர்களை ஒன்றிணைத்த IIT இன் முதல் மெய்நிகர் Careers Day 2020

Author
By Author
4 Min Read

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது வரலாற்றில் முதற்தடவையாக ஒன்லைன் தளத்தின் ஊடாக IIT Careers Day 2020 நிகழ்வை  நடாத்தியிருந்தது. கொவிட் 19  தொற்றுநோயின் பின்னர் இலங்கை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டிய தேவையின் பொருட்டு ஒன்லைன் தளத்துக்கான இம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வருடமும்,  உள்நாட்டு புளூ சிப், பல்தேசிய நிறுவனங்கள் உள்ளிட்ட இலங்கையின் முன்னணி  ICT மற்றும்  ICT அல்லாத நிறுவனங்களை ஒரே இடத்திற்கு கொண்டுவருவதுடன், அவர்கள் பல IIT இளங்கலை பட்டதாரிகளை சந்திக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. IIT மாணவர்கள் இந்த முன்னணி நிறுவனங்களுடன் சந்திப்பை மேற்கொண்டு, நேர்காணலுக்கு முகங்கொடுத்து, IIT பட்டப்படிப்பின் ஓர் அங்கமான ஒரு வருட உள்ளக பயிற்சியைப்  பெற்றுக்கொடுக்கும்  தளத்தை வழங்கும் நோக்குடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்குபற்றும் பல தரபட்ட நிறுவனங்களில், தாம் தமது தொழில் வாழ்வை ஆரம்பிக்க விரும்பும் நிறுவனத்தை தெரிவு செய்ய IIT மாணவர்களுக்கு முடியுமென்பதுடன், நிறுவனங்கள் தமது வேறுபட்ட தொழில் தேவைகளுக்கு பொருத்தமான இந்நாட்டின்  சிறந்த  ICT மற்றும் வணிக முகாமைத்துவ பட்டதாரிகளிடம் நேர்காணல் நடத்தி தெரிவு செய்துகொள்ள வாய்ப்பளிக்கின்றது.

Microsoft Teams ஊடாக நடாத்தப்பட்ட IIT Virtual Careers Day 2020, நிறுவனங்கள் பங்குபற்றி, மாணவர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை வழங்கியது. ஒவ்வொரு நிறுவனங்களும் தாம் தொடர்பில் ஏதேனுமொன்றை பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க கால எல்லை வழங்கப்பட்ட அதேவேளை மாணவர்கள் இதன் பின்னர் நிறுவனங்களுடன் உரையாடி, ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை தெளிவுபடுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதில் பங்குபற்றிய  முக்கிய நிறுவனங்களில்  Pearson Lanka, Dialog Ideamart, UniverSL Software, Econsulate, Auxenta, Vinota, Rootcode Labs, Infor Nexus Services, Omobio மற்றும் Creativeஆகியனவையும் சிலவாகும்.

இந்த நவீன தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த, தொழில்பயிற்சி இன் வேந்தர் நயோமி கிரிஷ்ணராஜா, “உள்ளக பயிற்சி என்பது  IIT இன் அனைத்து இளங்கலை பட்டப்படிப்புகளினதும் முக்கிய அம்சமாகும். மாணவர்கள் தொழில் சூழலில் அபிவிருத்தி செய்த பிரயோக ரீதியான பயன்பாடு மற்றும் திறன்களுடன் தமது வகுப்பறை அறிவினை உபயோகிக்கும் தொழில் உலகிற்கு நிஜ வாழ்விற்கான வெளிப்பாட்டை வழங்குகின்றது. உள்ளக பயிற்சியானது தெரிவு செய்யப்பட்ட துறையில் ஒரு தொழிலைத் தொடர தொழில் ரீதியான தொடர்புகளை அபிவிருத்தி செய்யும் கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளது. கொவிட் 19 க்கு இடையில், 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் IIT Careers Day  இல் பங்கேற்பதைக் காண்பதானது ஊக்கமளிப்பதாக இருந்ததுடன், உள்ளக பயிற்சி வாய்ப்புகள் மற்றும் அதற்கு எது தேவைப்படுகின்றது என்பதைப் பற்றிய நுண்ணறிவினையும் வழங்குகிறது. மேலும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும்  IIT இன் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதும் பெறுமதிமிக்கதாக இருந்தது. மொத்தத்தில் இது ஒரு பெரிய வெற்றியாகும், இந்த நிகழ்வின் வெற்றியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுக்கும் IITஇல் உள்ள நிறுவனங்கள், பழைய மாணவர்கள், IIT இன் தற்போதய மாணவர்கள், வேலை வாய்ப்பு குழுவுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்,” என்றார்.

“உலகம் ஒரு தொற்றுநோயை எதிர்கொண்டிருந்தாலும், அந்தந்த துறைகளில் தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்தை பாதிக்கவோ, தடுக்கவோ IITஅனுமதிக்கவில்லை. மிகவும் பாராட்டத்தக்க மெய்நிகர் தொழில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன்,  வளாகத்தால் நிகழ்வை ஏற்பாடு செய்யும்போது தனிப்பட்ட முறையில் நான் எந்தவிதமான குறைபாடுகளுக்கும் முகங்கொடுக்கவில்லை. இதனை நன்றாக செய்தமைக்கு வாழ்த்துக்கள்,” என Pearson Lanka வின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

Infor Nexus Services  இன் பிரதிநிதி ஒருவர் குறிப்பிடுகையில், “பல பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் முடக்கல் காலத்தில் செயல்படவில்லை என்றாலும்,  IIT சீராக இயங்குவதையும், நாட்டின் எதிர்கால மனிதவளம்  படித்தவர்களாகவும் நம்பிக்கையுடனும் இருப்பதை உறுதிசெய்ய நவீன தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் இந்த தொழில் தினத்தை ஒழுங்கமைக்க முடிந்தமையும்  பார்ப்பது நல்லது. மேலும் பல மாணவர்கள் தொடர்புகொள்வதையும் கேள்விகளைக் கேட்பதையும், நல்ல கேள்வி நிலவும் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருப்பதை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சர்வதேச அங்கீகாரமுடைய பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் இலங்கையின் முதலாவது தனியார் உயர்கல்வி நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster மற்றும் Robert Gordon ஆகிய பல்கலைக்கழகங்களின் உள்வாரியான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் விருது பெற்ற கல்வி நிறுவனமாக IIT திகழ்கிறது. IIT ஆனது, உலகத் தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதன் வாயிலாக இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, IIT 3,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதுடன், தற்போது 25 நாடுகளை தளமாகக் கொண்டுள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருநிறுவனங்கள் மற்றும் அரச தாபனங்களில் தகவல் தொழில்நுட்பம் அல்லது முகாமைத்துவ துறையிலான வல்லுனர்களாகத் திகழ்வதுடன், 250  பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் புளுசிப் கம்பனிகளில் உயர் பதவிகளை அலங்கரிப்பதன் வாயிலாக குறித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *