உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Huawei அண்மையில் Find Apps search widget ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை Huawei AppGallery ஊடாக தரவிறக்கம் செய்ய முடியும். இந்த புதிய தேடல் கருவியானது Huawei பாவனையாளர்களுக்கு மில்லியன் கணக்கான அப்ளிகேஷன்களை ஆராய்ந்து, தரவிறக்கம் செய்யும் நுழைவாயிலாக விளங்குகின்றது.
“Huawei இல் நாங்கள் எமது நுகர்வோருக்கு புதிய மற்றும் புத்தாக்க தொழில்நுட்பங்களை வழங்க கடமைப்பட்டுள்ளோம். Petal தேடல் பொறி மூலம் இயக்கப்படும் Find Apps search widgetஐக் கொண்டு, Huawei பாவனையாளர்கள் தற்போது தமது சாதனங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை எளிதாகக் கண்டுபிடிப்பதற்கும், ஆராய்வதற்கும், தரவிறக்குவதற்கும் முடியும்,” என Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான, பீட்டர் லியு தெரிவிக்கின்றார்.
Huawei பாவனையாளர்கள் தங்கள் HMS சாதனங்களில் அவர்கள் விரும்பும் அப்ளிகேஷன்களை வைத்திருப்பது தற்போது இன்னும் இலகுவானதாகும். உங்கள் அப்ளிகேஷன்கள், தொடர்புகள், தரவு, கோப்புகள் மற்றும் புகைப்படங்களை உங்கள் பழைய ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் புதிய ஸ்மார்ட்போனுக்கு சில எளிய படி முறைகளில் மாற்றுவதற்கான ஒரு எளிய வழிகளில் ஒன்று Phone Clone ஆகும்.
Huawei இன் உத்தியோகபூர்வ app store ஆன AppGallery, 420 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்த செயற்படு பாவனையாளர்களைக் கொண்டதுடன், தொடர்ந்து வளர்ந்து வரும் அப்ளிகேஷன்களின் பட்டியலைக் கொண்டது. இங்குள்ள அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்த பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த 4-அடுக்கு கண்டறிதல் பொறிமுறையை இது கொண்டுள்ளது. உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை தேடி, தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
Huawei பாவனையாளர்கள் தங்கள் HMS சாதனங்களில் AppGallery மற்றும் Phone Clone உடன் இணைந்து அப்ளிகேஷன்களைக் கண்டுபிடித்து பதிவிறக்கம் செய்யக்கூடிய மூன்று வழிகளில் ஒன்றே Find Apps search widget ஆகும். இதனை ஸ்மார்ட்போனின் முகப்புத் திரையில் இருந்து நேரடியாகப் பயன்படுத்தலாம்.
Petal தேடல் பொறியால் இயக்கப்படும் Find Apps search widget, ஒரு மாற்று தேடல் அனுபவத்தைத் தருகிறது. இது தகவல்களைக் கண்டுபிடித்து ஒருங்கிணைக்கிறது. மேலும் ஒவ்வொரு பாவனையாளருக்கும் தனிப்பட்ட ஸ்மார்ட்போன் அனுபவத்தை முழுமையாக வழங்கவும், நிர்வகிக்கவும் உதவும் வகையில் மிகவும் துல்லியமான, பொருத்தமான முடிவுகளை வழங்குகிறது. தற்போது, தேடல் கருவி பல மூலங்களிலிருந்து அப்ளிகேஷன்களை பட்டியலிடும் அதேவேளை அவற்றின் மூலத்தை அறியத்தருகின்றது. Huawei’s AppGallery ஆனது widget இல் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதுடன், AppGalleryஇல் ஏற்கனவே கிடைக்கும் எந்தவொரு அப்ளிகேஷனும், புதிய கருவியில் எந்தவொரு தேடலின் போதும் மேலே தோன்றும். ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான புதிய அப்ளிகேஷன்கள் AppGalleryஇல் தொடர்ந்து இணைக்கப்படுகின்றன.
உலகளாவிய முன்னணி தேடல் பொறிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட Find Apps search widget, வன்பொருள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் சிறந்ததை கொண்டு வருகின்றது. மேலும், இந்த முன்னணி தேடல் பொறிகளால் ஸ்தாபிக்கப்பட்ட இணையற்ற தனியுரிமை நியமங்களை பின்பற்றும் அதேவேளை Huawei பாவனையாளர்களுக்கு உயர் மட்ட தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கின்றது.
Find Apps search widget தற்போது 40 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு துணை புரிவதுடன், 45 நாடுகளிலும், பிராந்தியங்களிலும் கிடைக்கிறது, எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளுக்கும் இதனை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் உள்ளன. தற்போது AppGallery இல் Petal Search – Find Apps என தேடுவதன் மூலம் இதனை இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.