அண்மையில் இடம்பெற்ற ‘CMA Excellence in Integrated Reporting Awards 2021’ விருது விழாவில் பிளாட்டினம் விருதை DIMO வென்றுள்ளது. இந்நிகழ்வில் மொத்தமாக 4 விருதுகளை DIMO பெற்றுக் கொண்டது. ஏழு ஆண்டுகளாக ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக இவ்வாண்டு பிளாட்டினம் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் இவ்விருதினைப் பெறும் இலங்கையின் முதலாவது நிறுவனமாக DIMO தனது பெயரை நிலைநாட்டியுள்ளது.
‘Best Integrated Report – Diversified Holdings Sector’ (சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை – பன்முகப்படுத்தப்பட்ட துறை) இற்கான தங்க விருதையும் DIMO வெற்றி கொண்டது. அதன் வெற்றிப் பயணத்தில், ‘Best Concise Integrated Report’ (சிறந்த சுருக்கமான ஒருங்கிணைந்த அறிக்கை) எனும் விருதையும் DIMO வென்றதுடன், இலங்கையின் ‘Five Excellent Integrated Reports’ (ஐந்து சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கைகள்) மத்தியில் அங்கீகராத்தை பெற்றுக் கொண்டது. அத்துடன், DIMO பணிப்பாளர், பிரதான நிதி அதிகாரியும் நிறுவன செயலாளருமான சுரேஷ் குணரத்ன, CMA CFO Excellence Award விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
DIMO வின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “இவ்விருதுகள் DIMO குழுவின் கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சான்றாகும். நிறுவனம் பல்வேறு சவால்களை சமாளிக்கவும், ஒருங்கிணைந்த அறிக்கையிடல் துறையில் ஏனையோரை விட ஒரு படி மேலே இருப்பதற்குமான உந்து சக்தியாக அவை விளங்குகின்றன. நாம் சேவை வழங்கும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கும் எமது தூரநோக்கத்தை நாம் பேணும் அதே வேளையில், எதிர்காலத்திலும் இது போன்ற பல்வேறு வெற்றிகளைப் பெறுவோம் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
DIMO அதன் முதலாவது ஒருங்கிணைந்த அறிக்கையை 2011 இல் வெளியிட்டதோடு, அதனைத் தொடர்ந்து வந்த பயணம் பல கற்றல்களை வழங்கியது. ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடலின் முதல் கட்டமானது, அறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் வெளியிடப்பட்ட விடயங்களில், அறிக்கையை முழுமைப்படுத்துவதில் DIMO பிரதான கவனம் செலுத்தியுள்ளதை காண்பிக்கின்றது. மதிப்பு உருவாக்கத்தில் அதன் இரண்டாவது கட்டம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. DIMO தனது சிக்கலான வணிகச் செயல்பாடுகள், ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் மூலதனத்தின் ஒன்றோடொன்று தொடர்புகளை எளிமையான மற்றும் திறமையான முறையில் வெளிப்படுத்த முடிந்தமை காரணமாக இது மிக முக்கியமான கட்டமாகின்றது.
மூன்றாம் கட்டம் 2019இல் ஆரம்பமானது, DIMO தனது ஒருங்கிணைந்த அறிக்கையின் தரத்தை, சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிக்கைகளுக்கு இணையாக மேம்படுத்த முடிவு செய்தது. தற்போது, இந்த கட்டத்தின் மையமானது, நிறுவனம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, எவ்வாறு ஒருங்கிணைந்த சிந்தனை நடைமுறைப்படுத்தப்படுகிறது, ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடலானது கட்டமைப்பின் உட்பொருளை எவ்வாறு மனதில் கொள்ளப்படுகிறது என்பதைக் காண்பிக்கும் விதத்தில் DIMO வின் மதிப்பு உருவாக்கத்தின் கதையை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இந்த புதிய வளர்ச்சியின் வெளிபடுத்தலில், DIMO வின் மதிப்பு உருவாக்கக் கதையை, குறுகிய கட்டமைப்பிற்குள்ளும் அதிக ஒருங்கிணைப்புடனும் நிரூபிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோயானது, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு பாரிய சவாலாக அமைந்தது. எவ்வாறாயினும், தற்போதுள்ள புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்க DIMO வினால் முடிந்துள்ளதுடன், இந்த கடினமான காலங்களில் அது எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலையும் சமாளித்து வந்துள்ளது. DIMO தொடர்ந்து ஒருங்கிணைந்த அறிக்கையிடல் துறையில் உச்சத்தை எட்டியுள்ளதோடு, இது வணிக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இசைவாக்கமடைதல் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் விடாமுயற்சியுடன் செயல்படுதல் ஆகிய நிறுவனத்தின் திறனின் நேரடி விளைவுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
END