Tamil

vivo சேவை தினமான டிசம்பர் 21 இல், வாடிக்கையாளர்கள் பிரத்தியேக சேவைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறலாம்

 உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, டிசம்பர் 21 ஆம் திகதி அதன் ‘vivo Service Day 2021’ ஊக்குவிப்பு நிகழ்வில், பிரத்தியேகமான சேவைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தினத்தில், அங்கீகரிக்கப்பட்ட vivo சேவை மையங்களில் vivo வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன் சாதனங்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் இலவச சேவைகளைப் பெறலாம்.

vivo தனது வாடிக்கையாளர்களின் திருப்தியில் அதிக கவனம் செலுத்துவதுடன், இம்முயற்சியின் மூலம், அது இலங்கையிலுள்ள அதன் வாடிக்கையாளர் சேவை தளத்தையும் சலுகைகளையும் மேலும் வலுப்படுத்துகிறது. ‘vivo Service Day 2021’ தினத்தில் அங்கீகரிக்கப்பட்ட vivo சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் அனைத்து ஸ்மார்ட் அணிகலன்களுக்கும், 10% தள்ளுபடியைப் பெறலாம். free detection, free cleaning, free system recovery & upgrade, free protective film போன்ற இலவச சேவைகளை எவ்வித தொழிலாளர் கட்டணமும் இன்றி வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இந்த உற்சாகமான அறிவிப்பு தொடர்பில், vivo Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் அலிசன் ஜின் (Alison Jin) தெரிவிக்கையில், “நுகர்வோரை மையப்படுத்திய வர்த்தக நாமம் என்ற வகையில், வாடிக்கையாளர் அனுபவமே நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களினதும் மையத்தில் உள்ளது. பயனர்களின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான சேவைகள் மற்றும் அனுபவங்களை வழங்குவதையே நாம் முன்னுரிமையாக கொண்டுள்ளோம். vivo மற்றும் அதன் நுகர்வோருக்கு இடையிலான உறவையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் ‘vivo சேவை தினத்தை’ இன்று இலங்கையில் அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நுகர்வோருடனான எமது தொடர்பை தொடர்ந்தும் ஆழமாக பேணவும், எதிர்காலத்தில் vivo வாடிக்கையாளர்களுக்கு வசதியான சேவைகளை வழங்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்

vivo சமீபத்தில், இலங்கையில் உள்ள அதன் சேவை மையங்களில், வாடிக்கையாளர்கள் தங்களது சாதனங்களுக்கான பழுதுபார்த்தல் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் போது, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையிலான கேமிங் திட்டத்தை அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் vivo சேவை மையங்களுக்குள் நுழைந்தவுடன், பல்வேறு வகையான கேம்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வேடிக்கையான செயல்பாடுகளில் ஈடுபட முடியும். இதன்போது vivo வின் நிபுணத்துவ தொழில்நுட்ப வல்லுனர்களால் வாடிக்கையாளர்களின் சாதனங்கள் பழுதுபார்த்தல் அல்லது இற்றைப்படுத்தல் போன்ற பல்வேறு இலவச சேவைகள் மேற்கொள்ளப்படும்.

vivo அதன் அனைத்து சேவை மையங்களிலும் COVID-19 தொடர்பான சுகாதார விதிமுறைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பேணுவதில் அதிக கவனம் செலுத்துகின்றது.

அலிசன் ஜின் மேலும் தெரிவிக்கையில், “சேவை மையங்களில் காத்திருப்பதானது, ஒரு கடினமான பணி என்பதை vivo நன்கு அறியும். அந்த வகையில் எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் பாதையில் உள்ள எந்தவொரு தடைக்கல்லையும் நீக்கும் நோக்கில் புதிய திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

இலங்கையில் கொழும்பு மற்றும் காலியில் இரண்டு சேவை மையங்களை vivo கொண்டுள்ளது. ‘vivo Service Day 2021’ பற்றிய மேலதிக தகவலுக்கு, vivo வின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது [email protected] அல்லது 0112029184 ஊடாக தொடர்பு கொள்ளவும்.

vivo பற்றி

vivo ஆனது, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளை மையமாகக் கொண்டு, வடிவமைப்பு சார்ந்த மதிப்பின் அடிப்படையில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் மனிதர்களுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனித்துவமான படைப்பாற்றல் மூலமான வழிகளில் தொழில்நுட்பத்தையும் நவநாகரிகத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான, புதிய போக்கினை உருவாக்கும் ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதன் மூலம் பாவனையாளர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்க vivo உறுதிபூண்டுள்ளது. Benfen*, வடிவமைப்பு சார்ந்த மதிப்பு, நுகர்வோர் சார்ந்த நிலை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளைப் பின்பற்றி, vivo ஒரு முன்னணி, நீண்டகால, உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாறுவதற்கான தனது தொலைநோக்கினை அடைய நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தை செயல்படுத்தியுள்ளது.

சிறந்த உள்ளூர் திறமையாளர்களை ஒன்றிணைத்து மேம்படுத்தும் அதே வேளையில், vivo வின் தலைமையகம் சீனாவின் Dongguanஇல் அமைந்துள்ளதுடன் Shenzhen, Dongguan, Nanjing, Beijing, Hangzhou, Shanghai, Xi’an, Taipei, Tokyo, San Diego ஆகிய இடங்களில் 10 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையங்கள் 5G, செயற்கை நுண்ணறிவு, புகைப்படவியல், வடிவமைப்பு மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகள் உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. vivo சீனா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் (வர்த்தகநாம அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி மையங்கள் உட்பட) 7 உற்பத்தி மையங்களை ஸ்தாபித்துள்ளது. இது ஒவ்வொரு வருடமும் 200 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை அது தயாரிக்கின்றது. தற்போதைய நிலையின் பிரகாரம், vivo அதன் விற்பனை வலையமைப்பை 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உருவாக்கியுள்ளது, இது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை தன்வசம் கவர்ந்துள்ளது.

*“Benfen” என்பது சரியான விடயங்களைச் செய்வது மற்றும் விடயத்தை சரியாகச் செய்வது பற்றிய அணுகுமுறையை விபரிக்கும் ஒரு சொல்லாகும் – இது சமூகத்திற்கான மதிப்பை உருவாக்குவதற்கான vivo வின் செயற்பணியின் சிறந்த விளக்கமாகும்.

vivo தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு: https://www.vivo.com/en/about-vivo/news

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *