சிங்கர் மெகா அதன் 24ஆவது ஆண்டு நிறைவு விழாவை அண்மையில் கொண்டாடியது. இக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அனைத்து சிங்கர் மெகா காட்சியறைகளிலும் அனைத்துப் பிரிவுகளிலும் விசேட கொண்டாட்ட சலுகைகள் மற்றும் விசேட செயற்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.
சிங்கர் மெகாவின் முதலாவது காட்சியறை 1998இல் நிறுவப்பட்டதிலிருந்து, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வர்த்தகநாமங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள், வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் தளபாடங்களை அது ஒரே கூரையின் கீழ் வழங்குகின்றது. போதிய வாகன நிறுத்துமிட வசதி, தொடர்ச்சியான வாடிக்கையாளர் ஈடுபாட்டுடன் ஒப்பிடமுடியாத ஷொப்பிங் அனுபவத்துடன் இணைந்தவாறு, மிக நீண்ட காலமாக வீட்டுப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான மிகச் சிறந்த இடமாக சிங்கர் மெகா விளங்குகின்றது.
இந்த முக்கியமான தருணத்தில் சிங்கர் மெகாவின் விற்பனைப் பணிப்பாளர் வஜிர தென்னகோன் கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் முன்னணி, நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளர் எனும் வகையில், கடந்த 24 வருடங்களாக மிகச் சிறந்த பொருட்களை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த நாம் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகிறோம். எமது சமீபத்திய கொண்டாட்ட நிகழ்வுகளில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விசேட சலுகைகளை வழங்கியதோடு, பல்வேறு பொழுதுபோக்கு செயற்பாடுகளிலும் அவர்களை ஈடுபடுத்தி, அவர்களுடன் எமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடிந்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எதிர்காலத்திலும் எமது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைத் தரத்துடனான, பல்வேறு வர்த்தகநாமங்களின் மேலும் பல பரந்த தயாரிப்பு வகைகளை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
சிங்கர் மெகா காட்சியறைகள் புத்தம் புதிய தோற்றத்துடனும் எதிர்காலத்திற்கான தொலைநோக்கின் அடிப்படையில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இப்புதிய காட்சியறைகள் மிகவும் விசாலமானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு முன்னரை விட அதிக ஈடுபாட்டுடன் நிறைவான ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ZTE, TCL, DAHUA, DELL போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்ப வர்த்தகநாமங்களுடன் சிங்கர் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதுடன், அவை அனைத்து வாடிக்கையாளர்களும் அணுகும் வகையில் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கர் மெகாவின் வர்த்தக மேம்பாட்டு முகாமையாளர் மஞ்சுள சில்வா கருத்து வெளியிடுகையில், “நாம் உறுதியான புதிய தோற்றத்துடனும் புதிய நோக்குடனும் எதிர்காலத்தை நோக்கியதான சிறந்த பல படிமுறைகளை முன்னெடுத்து வருகிறோம். இலங்கையர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும், மேம்படுத்தவும் சிங்கர் தொடர்ந்து பலமாக வளர்ந்து வருகிறது” என்றார்.
இப்பயணத்தின் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு சிங்கர் மெகா காட்சியறைகளும், உலகம் முழுவதிலுமிருந்தான அனைத்து வகையான, பலதரப்பட்ட தயாரிப்பு வகைகளுடன், புதிய தோற்றத்துடன், புதிய வாடிக்கையாளர் அனுபவத்தையும் வழங்கும். அத்துடன், ஒவ்வொரு காட்சியறையிலும் அனைத்து வர்த்தகநாமங்கள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பான ஆழமான அறிவைக் கொண்ட ஊழியர்கள் மற்றும் kiosks (தன்னியக்க கருவிகள்) மூலமான செயலாக்கம் ஆகியன வாடிக்கையாளர்களின் கொள்வனவு அனுபவத்தை மேலும் மேம்படுத்தும்.
மிகக் கௌரவமான ஆரம்பத்துடன், 1877ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, சிங்கர் (ஶ்ரீ லங்கா) நிறுவனம் இலங்கையின் மிகப் பாரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக, நாடளாவிய ரீதியில் விளங்கி வந்துள்ளது. வீட்டுத் தயாரிப்புகள், தொழில்துறை சார்ந்த மற்றும் நிதி ரீதியான பிரிவுகளில் தங்களுடைய சொந்த தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய ரீதியிலான பல்வேறு வர்த்தகநாமங்களின் தயாரிப்பு வகைகளையும் சிங்கர் கொண்டுள்ளது.
END