ராணி சந்தன சோப் புதிய தோற்றத்துடன் 80 ஆண்டு கால அழகைக் கொண்டாடுகிறது

Author
By Author
5 Min Read

எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் அழகு சவர்க்காரங்களில் தனிச்சிறப்பு மிக்க ராணி சந்தன சவர்க்காரம், ‘ராணி போல் பிரகாசிக்க வேண்டும்’ எனும் கருப்பொருளின் கீழ், 80 ஆண்டு கால ஒப்பற்ற தரத்தை நினைவுகூருகின்றது.

1941ஆம் ஆண்டில், கந்தானையில் உள்ள சுதேசி உற்பத்தி நிலையத்தில் ராணி சவர்க்காரம் முதன்முதலில் உருவாக்கப்பட்டு, சந்தையில் வெளிவந்த முதலாவது இலங்கை அழகு சவர்க்காரம் எனும் பெயரை அது பெற்றது. இன்று, நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பர் 01 சந்தன அழகு சவர்க்கார தரக்குறியீடான ராணி சந்தன சவர்க்காரம், அதன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்று அங்கீகாரத்தை பெற்றிருப்பது தொடர்பில், சுதேசி நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.

The Swadeshi Industrial Works PLC இன் தலைவரான திருமதி A. M. விஜேவர்தன தெரிவிக்கையில், “தயாரிப்பில் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் மற்றும் தரநிலையின் நிலையான உயர்வு தொடர்பிலான அர்ப்பணிப்புடன், ராணி சந்தன சவர்க்காரம் இலங்கையில் அழகுப் பராமரிப்பு உற்பத்திகளின் உச்சத்தில் உள்ளது. ராணி சோப்பானது, இலங்கையில் மாத்திரமல்லாது கடல் கடந்து சர்வதேச சந்தையிலும் தனது பெயரை நிலைநாட்டியுள்ளது.” என்றார்.

Swadeshi Industrial Works PLC ஆனது, அதன் அதிநவீன வசதிகள், நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன், உற்பத்தி முறைமைகளைப் பயன்படுத்தி புது வகையான அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களை மகிழ்விக்கிறது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) தொடர்பில் சுதேசி நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீட்டை காணும்போது இம்முக்கியத்துவம் தெளிவாகத் தென்படும். இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப ஆய்வுகூடங்களைக் கொண்டுள்ளதுடன், அதன் செயன்முறைகள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI), ISO 9001 – 2015 தரச் சான்றிதழை பெற்றுள்ளது.

1960 முதல் 1980 வரையிலான காலப்பகுதியில் இலங்கை அழகிப் போட்டிகளான ‘Miss Ceylon’ மற்றும் ‘Miss Sri Lanka’ ஆகியவற்றிற்கு அனுசரணை வழங்கி வந்ததன் மூலம், ராணி சவர்க்காரம் இலங்கையின் அழகிகளுக்கு வழங்கும் அங்கீகாரத்திற்கான அசைக்க முடியாத ஆதரவை காண்பிக்கிறது.

சந்தனம் பல நூற்றாண்டுகளாக, அரச குடும்ப பெண்களின் அழகின் இரகசியமாக இருந்து வருகிறது. சந்தன மரப்பட்டையை கல்லில் தேய்த்து, பெறப்படும் இயற்கையான கலவையை சருமத்தில் பூசி அலங்கரிப்பதன் மூலம் , இளவரசிகள் மற்றும் பெண்கள் தங்களது சருமத்தை மென்மையாக்கவும், எண்ணெய்ப் பசையை குறைக்கவும், சருமத்தை அழகுபடுத்தவும் அழகிய நிறத்தைப் பேணவும் பயன்படுத்தி வந்தனர்.

சந்தனம் வெளிப்புறத் தோலின் அழகை மட்டுமல்லாது, இரத்த ஓட்டத்தை சீராக்கும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதன் மூலம் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது. இந்த மருத்துவ குணங்கள் தோல் நோய்களைத் தடுப்பதுடன் வியர்வையின் விளைவுகளை கட்டுப்படுத்தி உடலை குளிர்விக்க உதவுகிறது. எனவே, நமது முன்னோர்கள் மத்தியில் சருமத்தை அழகுபடுத்துவதில் சந்தனம் மிகவும் பயனுள்ள மூலிகை மருந்தாக இருந்து வந்துள்ளது.

இனிய வாசனைகளை நினைவுபடுத்தும் போது, இயற்கையாகவே சந்தனம் நம் நினைவுக்கு வருகின்றது. சந்தனத்தின் நறுமணம் தூய்மையின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதுடன், ஒரு தெய்வீக, சுவர்க்கலோக வாசனையை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு மேலும் அவர்களது பெண்மையை உணர வைக்கிறது.

சந்தனம் தரும் மன அமைதியானது, மனிதனின் ஆன்மிகத்தில் தாக்கத்தை செலுத்துகின்றது என, சமீபத்தில் மேற்கத்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் ஒன்லைன் சர்வதேச கலைக்களஞ்சியங்களில் கூட விவாதிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகள், சந்தனத்தின் மீதான ஆர்வம் தற்போது மேற்கத்தியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை காண்பிக்கின்றன.

அழகு சோப்புகளின் ராணியான, சந்தன எண்ணெயால் செறிவூட்டப்பட்ட ராணி சந்தன சோப், அழகின் 80 ஆண்டுகால உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது.

The Swadeshi Industrial Works PLC இனது, ராணி சந்தன சவர்க்காம், சந்தன அழகு பராமரிப்புப் பொருட்களின் தயாரிப்புப் பிரிவில் சந்தையில் முன்னணியில் உள்ளது.

100% உள்ளூர் நிறுவனமான சுதேசி, தனது தேசத்தைக் கட்டியெழுப்பும் என்பதுடன், இலங்கை சமூகங்களுக்கான அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களையும் (CSR) தொடரும். சுதேசி கொஹோம்ப வர்த்தக நாமமானது, இயற்கை அன்னையை பராமரிப்பதிலும் கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாது, நிலைபேறானதன்மை தொடர்பான திட்டங்களை செயல்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் விகாரைகளை ஒளியூட்டும் ‘சுதேசி கொஹோம்ப ஆலோக பூஜா’ நிகழ்வுகள், விகாரைகள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கான கை கழுவும் தொகுதிகள் வழங்கல், கொவிட்-19 தொற்றுநோய்களின் போது குழந்தைகளை நோக்காகக் கொண்ட வீடியோ மூலமான கைகளை கழுவுதல் தொடர்பான விழிப்புணர்வுகள், வேம்பு மர நடுகை பிரசாரங்கள், இலங்கையின் வறண்ட வலயத்தில் உள்ள சமூகத்தினர் மற்று பாடசாலைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு பரிசுகள் போன்றவற்றை வழங்குதல் ஆகியன, நிறுவனத்தின் பல சமூக நல முயற்சிகளாகும்.

இலங்கையில் மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும், சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. ராணி சந்தனம், சுதேசி கொஹோம்ப, சுதேசி கொஹோம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப் ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம் மற்றும் ராணி மற்றும் சுதேசி ஷவர் ஜெல் ஆகியன சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் உள்ளடங்குகின்றன.

“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசி அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறது. நாங்கள் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. ராணி சந்தனம் உள்ளிட்ட சுதேசி தயாரிப்புகள் யாவும் இங்கிலாந்தின் Vegetarian Society, UK யினது அங்கீகாரம் பெற்றவை.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, அண்மையில், எந்தவொரு நிறுவனமும் பெறாத COVID-19 பாதுகாப்பு முகாமைத்துவ சான்றிதழை பெற்றதுடன், இவ்வாறான தொழில்துறையில் முதன்முதலாக தனது பெயரில் பெற்ற பல்வேறு உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.

Photo Caption

திருமதி A. M. விஜேவர்தன – The Swadeshi Industrial Works PLC இன் தலைவர், கொழும்பு 03, Barefoot Gallery இல் நடைபெற்ற ராணி புதிய தோற்ற அங்குரார்ப்பண நிகழ்வின் போது ராணி சந்தன சோப்பின் புதிய தோற்றத்தை அறிமுகம் செய்தார்
இடமிருந்து:
திருமதி சூலோதரா சமரசிங்க – பிரதித் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர், அமில உடவத்த – பிரதம நிறைவேற்று அதிகாரி, திருமதி ஏ.எம். விஜேவர்தன – தலைவி, கவிந்த டயஸ் – அபேயசிங்க – பணிப்பாளர் மற்றும் சமிந்த ஜயசிங்க – சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் – Swadeshi Industrial PLC
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *