Tamil

Daraz இலிருந்து vivo V மற்றும் Y Series ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது அற்புதமான பரிசுகளை வென்றிடுங்கள்

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது ஐந்தாவது வருட பூர்த்தியை முன்னிட்டு  இலங்கையின் முதற்தர பாரிய ஒன்லைன் சந்தையான Daraz உடன் விசேட டயமன்ட்பங்குடமையில் இணைந்துள்ளது. vivo அதன் தொழில்நுட்பம் சார்ந்த இளைஞர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதனால், ஒன்லைன் ஸ்டோருடன் இணைந்து ‘Daraz Turns 5’ பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்த பங்குடமையானது உற்சாகமூட்டும் பரிசுகள் மற்றும் சலுகைகளுடன் கூடிய 7 நாள் நுகர்வோர் சார்ந்த பிரசாரத்தை vivo வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருகின்றது. ஒக்டோபர் 7 முதல் ஒக்டோபர் 13, 2021 வரை இது இடம்பெறுகின்றது.

இந்த 7-நாள் பிரசாரத்தின் போது, ​​வாடிக்கையாளர்கள் Daraz.lk இல் உள்ள vivoவின் flagship store இலிருந்து vivoவின் முதன்மையான V தொடர் மற்றும் பொழுது போக்குக்கு ஏற்ற Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் போது இயர்பட்ஸ், இயர்போன்கள், பென் டிரைவ்கள், vivo டி-ஷர்ட்கள் மற்றும் தொப்பிகள் போன்ற அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த பிரசாரத்தின் போது ஒரு அற்புதமான விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய vivo ஸ்மார்ட்போனை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.

V தொடரில், vivo அண்மையில் அறிமுகப்படுத்திய நேர்த்தியான, 44MP OIS Night Selfie System உடன் கூடிய V21 5G, மற்றும் 44MP Eye Autofocus கெமராவினை முன்பக்கம் கொண்ட  V21e இனை கொள்வனவு செய்ய முடியும். vivoவின் சிறப்பம்சங்கள் நிறைந்த Y series ஸ்மார்ட்போன்கள்பொதுவாக இளைஞர்களை ஈர்க்கும் வகையிலானதென்பதுடன், Y1s, Y12s, Y20s மற்றும் Y53s ஆகியன  தெளிவான புகைப்படம் எடுப்பதற்கான 64MP பின்புற கெமரா, 5000mAh பற்றரி மற்றும் 33W FlashCharge உடன் கூடியனவையாக உள்ளன. vivo Y1s, 6.22-inch Halo FullView™ திரையுடன், முழுமையான பூரண காட்சி அனுபவத்தை வழங்குகின்றது. பாரிய 5000mAh பற்றரி மற்றும் 3GB RAM ஆகியவற்றுடன் கூடிய vivo Y12s, சீரான செயற்பாட்டை உறுதி செய்கின்றது. G80 Gaming Processor பொருத்தப்பட்ட vivoவின் Y20s வாடிக்கையாளர்கள் இதுவரை இல்லாத வகையில் கேமிங் அனுபவத்தை வழங்குகின்றது. இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ள 4GB RAM மற்றும் 128GB ROM தடையற்ற செயற்பாட்டை வழங்குகின்றது.

இந்த பங்குடமை தொடர்பில் vivo Sri Lanka வின் பணிப்பாளர் எலிசன் ஜின் கருத்து தெரிவிக்கையில்,  நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமாக வாடிக்கையாளர் சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று vivo நம்புகிறது. தொழில்நுட்ப புத்தாக்கம், ஸ்டைலான வடிவமைப்புகள், அல்லது தனித்துவமான தள்ளுபடிகள், பரிசுகள் மற்றும் சேவைகளை வழங்குவதாக இருந்தாலும், இந்த வர்த்தகநாமம் எப்போதும் நுகர்வோர் தேவைகளைக் கவனித்து வருகிறது. இன்று, இலங்கையின் விருப்பமான ஒன்லைன் ஸ்டோரான Daraz உடன் கைகோர்ப்பதில் vivo மகிழ்ச்சியடைகிறது, இது vivo வை அதன் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக்கி வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதை மனதில் வைத்து, Daraz இடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட vivo ஸ்மார்ட்போன்களை  வாங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக vivo தனது வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றது,” என்றார்.

இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் vivo ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது முன்னணி கடன் அட்டைகள் ஊடான எளிய கட்டணத் திட்ட வசதியையும், பிரத்தியேக வவுச்சர்களையும் பெற்றுக் கொள்ள முடியும். DarazMall மற்றும் vivo Sri Lanka வின் Facebook பக்கத்தில் vivo flagship store பற்றிய கூடுதல் தகவலை நீங்கள் காணலாம்.

https://click.daraz.lk/e/_6fyYf வழியாக DarazMall இல் உள்ள vivo Flagship Store க்குச் செல்லவும்.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *