Tamil

Daraz.lk இல் அதன் பிரத்தியேக விற்பனை கூடத்தை திறந்துள்ள Anton

முற்றுமுழுதாக இலங்கை நாமமான Anton, 60 ஆண்டுகளுக்கும் மேலாக  வீட்டுப் பாவனை தீர்வுகளை உற்பத்தி செய்து வருவதுடன், அதன் தனித்துவமான வடிவமைப்புகள், நிலையான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரம் ஆகியவற்றை பேணியவாறு உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்து வருகின்றது. தெற்காசியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான Daraz.lk இல் தனது பிரத்தியேக கூடத்தை திறந்துள்ளதன் மூலம், ஒன்லைன் சந்தைப்படுத்தல் உலகில், Anton தனது விற்பனையை மேலும் ஒருபடி முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில், Daraz தளத்தில் முதலாவது PVC உற்பத்தி நிறுவனம் எனும் பிரத்தியேக அந்தஸ்தை Anton பெற்றுள்ளது.

Anton Garden Hoses (15M/30M), Anton Clear Hoses (30M), Anton Ball Valve, Anton Foot Valve, Thread Seal Tape, Solvent Cement போன்ற பரந்த அளவிலான Anton தயாரிப்புகளை Daraz.lk ஊடாக வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யலாம். Anton தற்போது இந்த இணைய வர்த்தக தளத்தில் மேலும் பல தயாரிப்புகளைச் சேர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதோடு, அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இலகுவான முறையில் அதன் தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Daraz தளத்தின் மூலம் Anton தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், விசேட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

Anton நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், “இணைய வர்த்தக உலகில் எமது இருப்பை விரிவுபடுத்துவதானது, எமது பாரிய முன்னெடுப்புகளில் ஒன்றாகும். Daraz.lk தளத்தில் பிரத்தியேகமான கூடமாக நாம் மாறுவது எமக்கு ஒரு கெளரவமாகும். ஏனெனில் இது டிஜிட்டல் வர்த்தகத் துறையில் எமது முதலாவது நுழைவு என்பதுடன், இது வாடிக்கையாளர்களுக்கு எமது பரந்த தயாரிப்பு வகைகளை மேலும் எளிதாக அணுக உதவியாக அமையும்.” என்றார்.

இலங்கையின் PVC தொழிற்துறை, நீர்த் தாங்கிகள், கூரையிடல் தொழில்துறை மற்றும் நுகர்வோர் துறைகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக Anton விளங்குகின்றது. Anton நிறுவனம் Pressure Pipes & Fittings, Water Tanks, Thermo CPVC Pipes & Fittings, Non-Pressure Pipes & Fittings, Rainwater Gutters & Fittings, Valves, Adhesives & Sealants, Conduits & Trucking, Nets, Hoses, Polar Insulation உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வழங்குகின்றது.

தரம் மற்றும் பாதுகாப்பு, சிறந்த ஆதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் புத்தம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் Anton தனது மதிப்பை பேணி வருகிறது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *