Tamil

BID2WIN போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய zMessenger மற்றும் HUTCH

zMessenger நிறுவனம் Hutch நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த BID2WIN  போட்டி  அண்மையில் நிறைவடைந்ததுடன், இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்புகளின் வெற்றியாளர்களுக்கு இதன் போது பரிசுகளும் வழங்கப்பட்டன.       

2020 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற Wagon R கார் ஊக்குவிப்பின் வெற்றியாளராக கடுவளையைச் சேர்ந்த அசேன் இமந்த குணசேன மற்றும் 2020 ஜூலை 1 ஆம் திகதி முதல் ஜூலை 20 ஆம் திகதி வரையான Honda Dioபைக் ஊக்குவிப்பின் வெற்றியாளராக மஸ்பொத்தயைச் சேர்ந்த பி.ஏ.ஜே. காமினி பெரேராவும் தெரிவாகினர்.

BID2WIN, மொபைல் சந்தாதாரர்களிடையே மிகவும் பிரபலமான போட்டியாகும். இது குறுந்தகவல் மூலமான விலைகோரல் மூலம் பாரிய பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகின்றது. இதற்கு அவர்கள் செய்ய வேண்டியது மிகவும் குறைந்த தனித்துவமான விலைகோரல் பெறுமதியை முன்வைப்பதாகும். இதன் போது வெற்றியாளருக்கு ஒதுக்கப்பட்ட பரிசு வழங்கப்படும். இந்த போட்டியை மிகவும் சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் ஆக்குவது என்னவென்றால், மொபைல் போன்கள், மோட்டார் பைக்குகள், கார்கள் மற்றும் பல புதிய பரிசுகள் சீராக அறிமுகப்படுத்தப்படுகின்றமையாகும். போட்டியின் ஏற்பாட்டாளர்கள் போட்டியின் தொடக்கத்தையும் முடிவையும், பரிசு விபரங்களையும் மற்றும் ஒவ்வொரு போட்டியின் வெற்றியாளர்களையும் எஸ்.எம்.எஸ் அல்லது ஒளிபரப்பு ஊடகங்கள் வழியாக அறிவிக்கின்றனர்.

நாட்டின் முன்னணி மொபைல் சேவை வழங்குநர் என்ற வகையில், வாடிக்கையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க புத்தாக்க ஊக்குவிப்புகளை HUTCH தொடர்ந்து ஆதரிக்கிறது, அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகளையும் வழங்குகிறது. அதன் Bigger and Better 4Gவலையமைப்பை பூர்த்தி செய்தவுடன், இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க பயணமாக இருந்து வருகிறது. மேலும் அதன் நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிப்பதை தொடர்வதில் HUTCH மகிழ்ச்சியடைகிறது.

பெயர்களுடன் படங்கள் இடமிருந்து வலமாக

எரந்த சஞ்சீவ, சிரேஷ்ட தயாரிப்பு முகாமையளர் – zMessenger, வெற்றியாளர், Honda Dio Bike ஊக்குவிப்பு – காமினி பெரேரா – மஸ்பொத்த, வெற்றியாளர், Wagon R Car ஊக்குவிப்பு – அசேன் இமந்த குணசேன – கடுவளை, மட்ரீக் நஹோடுனா, முகாமையாளர் – VAS, Hutchison Lanka (Pvt) Ltd, கசுன் ஜயசூரிய, துணை முகாமையாளர் – VAS, Hutchison Lanka (Pvt) Ltd

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *