Tamil

Huawei சேவை திருவிழா: அற்புதமான சலுகைகள், நன்மைகளுடன் ஆரம்பம்

இலவச பழுதுபார்த்தல் தள்ளுபடி கூப்பன், 3 மாதங்களுக்கு 50GB Cloud Storage, இன்னும் பல

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, தனது நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில், சிறந்த சேவை அனுபவத்தை வழங்கும் வகையிலான, பல்வேறு நன்மைகளுடனான Huawei சேவைத் திருவிழாவை (Huawei Service Carnival) இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2021 மே 22 வரை நடைமுறையிலுள்ள Huawei சேவைத் திருவிழாவானது, பழுதுபார்ப்பு தள்ளுபடி கூப்பன்கள், புதிய Huawei Cloud பயனர்களுக்கு 50GB இலவச Cloud சேமிப்பக இடைவெளி, இலவச இயங்குதள மேம்பாடுகள் மற்றும் துப்புரவு சேவைகள் (cleaning services) உள்ளிட்ட பல பயனுள்ள சேவைகள் மற்றும் விசேட சலுகைககளை, இலவசமாக அல்லது மிகவும் மலிவு விலையில் வழங்குகின்றது.

Huawei கையடக்க சாதனங்களை கொண்டுள்ளவர்கள், Huawei உதவி (Huawei Support) செயலியை அதன் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிப்பதன் மூலம், இச்சேவை திருவிழாவில் பங்கேற்கலாம். புதுப்பிக்கப்பட்ட செயலியைத் திறந்ததும், அதில் காண்பிக்கப்படும் பெனரை (Huawei Service Carnival) கிளிக் செய்து, அதன் பக்கத்திற்கு சென்று, ஒவ்வொரு நிகழ்வுகளுக்குமான நன்மைகளை அடைந்து கொள்ளலாம்.

தற்போது இடம்பெற்றுவரும் Huawei சேவைத் திருவிழா குறித்து கருத்துத் தெரிவித்த, Huawei சாதனங்களுக்கான இலங்கைக்கான தலைவர், பீட்டர் லியு, “எமது நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான Huawei சேவைத் திருவிழா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பழுதுபார்ப்பு தள்ளுபடிகள், இலவச இயங்குதள மேம்பாடுகள், துப்புரவாக்கல் சேவைகள், கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற அற்புதமான நன்மைகளை, Huawei சேவை திருவிழாவில் பெறலாம். அத்துடன் பயனர்கள் தங்களது பெரும்பாலான தேவைகளை இதில் பூர்த்தி செய்ய முடியும் என்பதோடு, அவர்கள் இந்த சேவைகளை இலவசமாக அல்லது பழுதுபார்ப்பு போன்ற சில சேவைகளை மிகவும் குறைந்த விலைகளில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகள், பயனர் நட்பு, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்கான எமது திறன்கள் உள்ளிட்டவற்றில் நம்பிக்கை கொண்டு, எம்முடன் நீண்ட காலமாக இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு முயற்சியாக Huawei சேவை திருவிழா அமைகின்றது.” என்றார்.

புதிய ஸ்மார்ட்போன்களின் கொள்வனவிற்கான சலுகைகள் மாத்திரமன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களுக்கான இலவச பழுதுபார்ப்பு தள்ளுபடி கூப்பனையும் Huawei வழங்குகிறது. இக்கூப்பன்கள் கால வரையறையற்ற உத்தரவாத காலத்தை கொண்டுள்ளதுடன், நாடு முழுவதும் காணப்படும் எந்தவொரு Huawei சேவை மையங்களிலும் அதற்கான சேவைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, பழைய Huawei சாதனங்களைக் கொண்டுள்ள பயனர்கள், இச்சேவைத் திருவிழாவின் போது, Huawei சேவை மையங்களுக்குச் சென்று குறைந்த விலையில் தங்கள் சாதனங்களை திருத்திக் கொள்ளலாம்.

அத்துடன், முதல் முறையாக கிளவுட் சேவைக்கு பதிவு செய்யும் Huawei மொபைல் கிளவுட் பயனர்கள், 3 மாதங்களுக்கு இலவசமாக 50GB கிளவுட் சேமிப்பிடத்தை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் சாதனங்களை சீராக இயங்க வைக்க அதன் இயங்குதளங்களுக்கான மேம்படுத்தல்கள் அவசியம் என்பதோடு, அடிக்கடி அதனை சுத்தம் செய்வதும் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றாகும். Huawei சேவைத் திருவிழாவின் போது, ​​Huawei சேவை மையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் இலவச இயங்குதள மேம்படுத்தல்களைப் பெறலாம் என்பதுடன், அவர்களின் சாதனங்களை இலவசமாக சுத்தம் செய்யலாம். இச்சலுகை எந்தவொரு Huawei ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லெட்டுகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Huawei சேவைத் திருவிழா தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, Huawei Support செயலியுடன் இணையுங்கள். இது தொடர்பான எந்தவொரு கேள்விகளுக்கும் அதன் live chat வசதியை பயன்படுத்தவும்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப

நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *