Tamil

சரும நட்பு தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது

கொவிட்-19 தொற்றுநோயின் தொடர்ச்சியான அச்சுறுத்தல், ஒவ்வொரு தனிநபரும் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதை வலியுறுத்தியுள்ளது. தற்போது கைகளின் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த சரும பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். காரணம், பல்வேறு சரும பராமரிப்பு பொருட்கள், சரும வரட்சி மற்றும் பொலிவு இழப்பை ஏற்படுத்துவதன் காரணமாக, அவை உண்மையில் சருமத்தின் அழகை பாதிக்கச் செய்கின்றன. தங்கள் சருமத்தின் அழகை முடிந்தவரை தக்கவைத்துக் கொள்ள விரும்பும், அழகு  உணர்வில் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு இது ஒரு பொதுவான கவலையாக மாறியுள்ளது. சந்தையில் பல வகையான சரும பராமரிப்பு பொருட்கள் காணப்பட்ட போதிலும், சில பொருட்கள் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவையாகவும், சரும பிரச்சினைகளுக்கு காரணமானவையாகவும் உள்ள அதே நேரத்தில், அப்பொருட்களில் உள்ள கடுமையான வாசனைகளும் மற்றொரு பிரச்சினையாக காணப்படுகின்றது.

சில சரும பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக இவ்வாறான சருமப் பிரச்சினைகள் ஏற்படுகின்றமை ஒரு விடயமாக அமைந்துள்ள நிலையில், இலங்கையின் வெப்பமான காலநிலையும் சருமத்தில் வரட்சி, பொலிவிழப்பு, எரிச்சல் போன்ற விடயங்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. நீங்கள் கொள்வனவு செய்யும் சவர்க்காரம், கை துப்பரவாக்கி, லோஷன்கள், பொடி வொஷ் (soap, hand wash, lotions, body wash) போன்ற தோல் பராமரிப்பு பொருட்களில் நீங்கள் கவனம் செலுத்துகின்றீர்களா? வைரஸ் மற்றும் கிருமிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதானது, அன்றாட தேவையாகிவிட்ட இன்றைய சூழலில் இது மிகவும் பொருத்தமான கேள்விகளில் ஒன்றாகும். எனவே, அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தோல் பராமரிப்பு தயாரிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமாகின்றது.

இதற்கு ஒரு தீர்வாக,  ஒரு தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், குறித்த தயாரிப்பில் ஒட்டப்பட்டுள்ள குறிப்பை முழுமையாக ஆராய்ந்து, அதில் வழங்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக வாசித்து அறியுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலான தயாரிப்புகளில் அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்கள் மற்றும் அது கொண்டுள்ள உரிய சான்றிதழ்கள் பற்றிய விரிவான விளக்கம் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆயினும், அனைத்து பொருட்களும் சருமத்திற்கு உகந்தவை என்று அர்த்தமாகாது. சரும நட்பு தயாரிப்புகள் பற்றிய அறிவானது, அப்பொருட்களை பயன்படுத்துவோர் அதிலிருந்து மீள வழிவகுக்கும்.

சரும பராமரிப்புப் பொருளைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமானது அதன் ஈரப்பதனளிக்கும் பண்பாகும். காரணம் ஒரு தயாரிப்பு ஈரப்பதனளிக்கும் பண்புகளைக் கொண்டிருக்குமாயின், அதனை பயன்படுத்தும் போது, ​​அது சருமத்தை ஈரப்பதனாகவும், தோல் வரட்சியைத் தடுக்கவும், அதில் சுருக்கங்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கவும் வழி ஏற்படுத்துகிறது. அடிக்கடி கை கழுவுதல் மற்றும் தூய்மையாக்கம் செய்வதன் காரணமாக, ஈரப்பதனாக்கும் காரணி முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

ஒரு தோல் பராமரிப்பு தயாரிப்பானது, நல்ல தரமானதாகவும், பயன்பாட்டின் போது பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டுமானால், அது தோலியல் சோதனை சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். தோல் பராமரிப்பு தயாரிப்புகளுக்கு அதுவே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் ஆகும். குறித்த தயாரிப்பு சருமத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது என, தோல் மருத்துவர்களால் சோதிக்கப்பட்டதனை அச்சான்றிதழ் உறுதிப்படுத்துகின்றது.

அது மாத்திரமன்றி, NMRA மற்றும் ISO சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்பான வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதற்கான IFRA சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்கள் மூலம் ஒரு சிறந்த தரமான சரும பராமரிப்பு தயாரிப்பின் தரத்தை தீர்மானிக்க முடியும். சரும பராமரிப்பு தொடர்பான பொருட்கள் மீது அக்கறை கொண்டவர்கள், குறிப்பிட்ட சான்றிதழ்களின் அடிப்படையில் குறித்த உற்பத்திகளை தெரிவு செய்வது சிறப்பானதாகும்.

இது தொடர்பில் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான காரணி, குறிப்பிட்ட தயாரிப்பு இலங்கைக்கு உரித்துடையதா என்பதாகும். இலங்கையர்களின் சரும வகைகள் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களின் சருமங்களை விட வித்தியாசமானதாகும். உள்ளூர் உற்பத்தியாளர்கள் பொதுவாக உள்நாட்டிலுள்ளவர்களின் சருமங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் தங்களது மூலப்பொருள் கலவைகளை நன்கு அறிந்து தயாரிக்கின்றனர்.

Velvet ஆனது, சிறந்த தனிநபர் தூய்மைப்படுத்தல் மற்றும் சரும பராமரிப்பு பொருட்களை வழங்குவதற்கான உயர்ந்த வரலாற்றைக் கொண்ட ஒரு உண்மையான இலங்கை தரக்குறியீடாகும். Velvet ஆனது, அதன் வாக்குறுதியின் மையத்தில் நுகர்வோரின் பாதுகாப்பை தக்கவைத்துள்ளது. இது அதிக ஈரப்பதனை பேணும் வகையிலான சரும நட்பு தயாரிப்புகளை வெளியிடுகின்றது. Velvet அதன் சோப், பொடி வொஷ், ஹேண்ட் வொஷ், பொடி லோஷன் உள்ளிட்ட விரிவான தயாரிப்பு பிரிவுகளை கொண்டு வருகிறது. அவை தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப மிக உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்படுகின்றன.

Velvet தயாரிப்புகளில் உள்ள தனித்துவமான Hydrosoft தொழில்நுட்பமானது, ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் மென்மையான சருமத்தை வழங்கும் வகையில் ஈரப்பதனை தக்கவைத்துள்ளது. Velvet சோப், ஹேண்ட் வொஷ், பொடி வொஷ் தயாரிப்புகள் யாவும், சருமத்தில் பயன்படுத்த மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது எனும் தோல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், Velvet பொடி லோஷன் இலங்கையர்களின் தோலுக்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Velvet ஆனது, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA) சான்றிதழ் மற்றும் ISO சான்றிதழ்களைக் கொண்டுள்ளது. அத்துடன், IFRA சான்றிதழைக் கொண்ட தரக்குறியீடு என்பதால், Velvet ஆனது, அதன் தயாரிப்புகளில் மெல்லிய வாசனை திரவியங்களை பயன்படுத்தும் ஒரு தரக்குறியீடு எனும் புகழ் பெற்று விளங்குகின்றது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *